நான், சலீமை தொடர்ந்து பிச்சைக்காரன்!

நான், சலீமை தொடர்ந்து பிச்சைக்காரன்!

செய்திகள் 26-Apr-2016 10:16 AM IST VRC கருத்துக்கள்

தற்போதைய சூழ்நிலையில் ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஓடினாலே அதனை வெற்றிப் படமாக கொண்டாடப்படுகிறது. இதை தவிர்த்து விரல் விட்டு என்ணக்கூடிய அளவிலான படங்களே 25 நாட்கள், 50 நாட்கள் என்று ஓடுகிறது. அப்படி ஓடினால் அது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ சாதனை படைத்துள்ளது. இந்த படம் வெளியாகி இன்று 50-ஆவது நாளை தொட்டுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த விஷயங்களாக ஃபேமிலி ஆடியன்ஸை டார்கெட் வைத்து அமைக்கப்பட்ட திரைக்கதை, சசியின் சீரான இயக்கம், விஜய் ஆண்டனி உட்பட படத்தில் பங்காற்றியவர்களின் சிறந்த பங்களிப்பு ஆகியவை குறிப்பிடலாம். ஏற்கெனவே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி 50 நாட்களை கடந்து ஓடிய ‘நான்’, ‘சலீம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது அவரது பிச்சைக்காரனும் அந்த இலக்கை எட்டியுள்ளது. இது ‘பிச்சைக்காரன்’ டீமுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;