தமிழ்நாட்டில் தனுஷ், கேரளாவில் நிவின் பாலி!

தமிழ்நாட்டில் தனுஷ், கேரளாவில் நிவின் பாலி!

செய்திகள் 26-Apr-2016 9:48 AM IST Chandru கருத்துக்கள்

‘நேரம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் நிவின் பாலி. அதோடு பெங்களூர் டேஸ், பிரேமம் படங்களின் மூலம் தமிழக இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகவே மாறிவிட்டார். மலையாளத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நிவின் பாலியும், நம்மூர் தனுஷும் ஒரு விஷயத்தில் ஒரே இடத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். ஆம்... சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று ‘அதிகம் விரும்பப்படும் மனிதர்’ என்ற தலைப்பில் தென்னிந்தியாவில் சர்வே ஒன்றை நடத்தியது. மாநிலவாரியாக நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் ‘அதிகம் விருப்பப்படும் மனிதர்’ என்ற பட்டத்தை நடிகர் தனுஷ் கைப்பற்றியிருப்பதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

தமிழ்நாட்டில் தனுஷ் பிடித்த இடத்தை கேரளாவில் நிவின் பாலி கைப்பற்றியுள்ளாராம். நிவின் பாலியைத் தொடர்ந்து 2வது இடத்தில் துல்கர் சல்மானும், 3வது இடத்தில் பிருத்திவிராஜும் பிடித்திருப்பதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;