‘மணல் கயிறு’ படத்தில் அனிருத்!

‘மணல் கயிறு’ படத்தில் அனிருத்!

செய்திகள் 25-Apr-2016 6:08 PM IST VRC கருத்துக்கள்

34 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘மணல் கயிறு’. விசு இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்ற செய்தியை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தோம். ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘யாருடா மகேஷ்’ பட புக்ழ மதன் குமார் இயக்குகிறார். தரண் குமார் இசை அமைக்கிறார். இப்போது இந்த படத்திற்காக தரண்குமார் இசையில் அனிருத் பாடலை பாடவிருக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளனர். ‘மணல் கயிறு’ முதல் பாகத்தில் விசு, எஸ்.வி.சேகர், குரியகோஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இப்போது உருவாகும் ‘மணல் கயிறு’ இரண்டாம் பாகத்தில் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் கதாநாயகனாக நடிக்க, பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுதுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;