‘ஹோலா அமிகோ’வுக்கு விளக்கம் தந்த அனிருத்!

‘ஹோலா அமிகோ’வுக்கு விளக்கம் தந்த அனிருத்!

செய்திகள் 25-Apr-2016 5:07 PM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘ரம்’ படத்திற்காக அனிருத் இசை அமைத்து பாடியுள்ள பாடல் ‘ஹோலா அமிகோ’. அனிருத்தின் மற்ற பாடல்களைப் போலவே இணையத்தில் வெளியான இப்பாடலும் ரசிகர்களின் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய காரனம், ‘ஹோலா அமிகோ’ என்ற வார்த்தை தான்! இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று குழம்பிப் போன ரசிகர்களுக்கு விளக்கம் தந்துள்ளார் அனிருத்! அதில், ‘‘நான் க்யூபாவில் இசை நிகழ்ச்சி நடத்தும்போது அங்குள்ள மக்கள் ‘ஹோலா’ என்ற வார்த்தையை சகஜமாக உபயோகிப்பதை கண்டேன். அதன் அர்த்தம் என்ன என்று வினாவியபோது ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறும் வார்த்தை அது என்று தெரிய வந்தது. உற்சாகம் தரும் அந்த வார்த்தையை ஏன் நாம் ஒரு தமிழ் பாடலில் உபயோகிக்க கூடாது என்று தோன்றியதன் விளைவே ‘ரம்’ படப் பாடலில் அந்த வார்த்தை இடம்பெற காரணம்’’ என்றார். ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சஞ்சிதா ஷெட்டி, மியா, ரிஷிகேஷ், விவேக், நரேன் ஆகியோர் நடிக்க, சாய் பரத் இயக்கி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;