ஏற்கெனவே பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பிறகு அந்த தேதிகளில் ரிலீசாகாமல் இருந்து வந்த படம் ‘மதகஜராஜா’. இந்நிலையில் இப்படம் சமபந்தமான அனைத்து பிரச்சனைகளும் முடுவுக்கு வந்துவிட்டது, ‘மதகஜராஜா’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து ‘மதகஜராஜா’ இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்ற விளம்பரங்களும் வந்துகொண்டிருந்தது. ஆனால் இந்த தேதியிலும் ‘மதகஜராஜா’ ரிலீசாகாதாம். கடந்த ஒரு சில நாட்களாக இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீஸ் என்று குறிப்பிட்டு ‘மதகஜராஜா’ விளம்பரங்கள் பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது வரும் விளம்பரங்களில் ரிலீஸ் தேதி குறிப்பிடவில்லை! இதற்கு காரணம் படத்தின் ரிலீஸ் இன்னும் தள்ளுகிறதாம்! அதாவது அடுத்த மாதம் (மே) 13-ஆம் தேதிக்கு ‘மதகஜராஜா’வின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்களாம். சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சோனு சூட் முதலானோர் நடித்துள்ள படம் இது.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...