பிரபல மலையாள ரீ-மேக்கில் மாதவன்!

பிரபல மலையாள ரீ-மேக்கில் மாதவன்!

செய்திகள் 25-Apr-2016 12:43 PM IST VRC கருத்துக்கள்

துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மலையாள படம் ‘சார்லி’. இப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்து தயாரிக்கும் உரிமையை பாலிவுட்டில் பிரபல திரைப்பட நிறுவனமாக விளங்கி வரும் ‘பிரமோத் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைபற்றியிருப்பதாக அதன் உரிமையாளர்களான பிரதீப் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இருவரும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். ‘சார்லி’யை தமிழில் ரீ-மேக் செய்யும் வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வர, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் தமிழில் மாதவன் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதைப் போல ‘சார்லி’யில் கதாநாயகியாக நடித்த பார்வதியையே தமிழிலும் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறதாம். மலையாள ‘சார்லி’யை இயக்கிய மார்ட்டின் பிரக்காட்டே தமிழிலும் இயக்கவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் -1 நிமிட ட்ரைலர்


;