விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண்குமார். அப்படத்தைத் தொடர்ந்து ‘சேதுபதி’ படம் மூலம் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்தார் அருண்குமார். விஜய்சேதுபதியின் கேரியரில் இப்படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல்முறையாக போலீஸ் யூனிஃபார்மிலும் வலம் வந்தார் விஜய். முதல் இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியாக அமைந்துவிட்டதால், தற்போது இயக்குனர் அருண்குமாரைத் தேடி அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம்.
சேதுபதிக்குப் பிறகு அருண்குமார் இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் விஷால் ஹீரோவாக நடிப்பார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...