ஜி.வி. பட டீஸரை வெளியிடும் இசைப்புயல்!

ஜி.வி. பட டீஸரை வெளியிடும் இசைப்புயல்!

செய்திகள் 25-Apr-2016 12:14 PM IST Chandru கருத்துக்கள்

‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் மூலம் ஜி.வி.க்கு 2வது முறையாக ஜோடியாகியுள்ளார் ஆனந்தி. இவர்களோடு நிரோஷா, சரவணன், கருணாஸ், யோகி பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் இப்படத்தின் டீஸரை வரும் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள். இந்த டீஸரை தமிழ் சினிமா பிரபலம் ஒருவர் வெளியிடுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பிரபலம் வேறு யாருமல்ல... ஜி.வி.யின் உறவினரும், ஆஸ்கர் நாயகனுமான ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்தானாம். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;