10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனுஷ் - யுவன்!

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனுஷ் - யுவன்!

செய்திகள் 25-Apr-2016 11:25 AM IST Chandru கருத்துக்கள்

தனுஷின் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. அப்படத்தின் வெற்றிக்கு யுவனின் இசையையும் முக்கிய காரணம். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி ஆகிய படங்களுக்கும் யுவன் இசையமைத்துள்ளார். யுவன் இசையில் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் ‘நாட்டுச் சரக்கு...’ பாடலைப் பாடிய தனுஷ், அதன் பிறகு ‘புதுக்பேட்டை’ படத்தில் ‘எங்க ஏரியா உள்ள வராத...’ பாடலையும் பாடியுள்ளார்.

‘புதுப்பேட்டை’ வெளிவந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு யுவன் இசையில் மீண்டும் பாடியுள்ளார் தனுஷ். கிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் ‘யாக்கை’ படத்திற்காக யுவன் இசையில், தனுஷ் குரலில் ‘சொல்லித் தொலையேன்மா...’ என்ற பாடல் கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. யுவன் இசையில், இதற்கு முன்பு பாடிய இரண்டு பாடல்களுமே தன் படத்திற்காகப் பாடினார் தனுஷ். முதல்முறையாக இப்போதுதான் யுவன் இசையில் வேறொரு ஹீரோவுக்காக தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;