‘விஜய்-60’ அதிகாரபூர்வ தகவல்கள்!

‘விஜய்-60’ அதிகாரபூர்வ தகவல்கள்!

செய்திகள் 25-Apr-2016 11:10 AM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் 60ஆவது படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியது. விஜய் நடிப்பில் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கும் இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், பிரவீன் எடிட்டிங் செய்கிறார்… இது போன்ற ஒரு சில தகவல்களே இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகியிருந்தது. இப்போது இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்தில் ஸ்ரீமன், அபர்ணா வினோத், டேனியல் பாலாஜி, ‘ஆடுகளம்’ நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஷ் உத்தமன், மைம் கோபி, சரத் லோகிதஸ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதலில் இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இப்போது சுகுமாரன் ஒளிப்பதிவு செய்வதாக அறிவித்துள்ளார்கள். ஸ்டன்ட் இயக்குனராக அனல் அரசு பணியாற்றுகிறார். ஆடை வடிவமைப்பாளர்களாக ப்ரீத்தி ரெட்டி, சத்யா ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;