‘பீட்சா’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய கார்த்திக் சுப்புராஜ், தன் முதல் படத்திலேயே இயக்குனருக்கான தனி முத்திரையைப் பதித்தார். அதேபோல் தனது இரண்டாவது படமான ‘ஜிகர்தண்டா’ மூலம் அவர்மேல் ரசிகர்களுக்கிருந்த நம்பிக்கையும் பன்மடங்கானது. இப்போது கார்த்திக் இயக்கத்தில், விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடித்திருக்கும் ‘இறைவி’ வரும் மே 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டீஸர், டிரைலர், பாடல்களும் படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற செய்தி கடந்த சனிக்கிழமை இரவு வெளியானது முதல் ரசிகர்கள் பலரும் அப்படம் குறித்து சமூக வலைதளங்கில் தங்களின் எதிர்பார்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தேசிய விருதை வென்ற தனுஷும், இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஜிகர்தண்டா’ படத்தின் இயக்குனரும் புதிய கூட்டணி அமைத்திருப்பதால் இப்படத்தின்மீது இப்போதே எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
தனுஷ் தற்போது கொடி, என்னை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய படங்களோடு ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்தபிறகு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் செப்டம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் எனவும், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...