அஜித் பிறந்த நாளில் ‘கபாலி’ டீஸர்?

அஜித் பிறந்த நாளில் ‘கபாலி’ டீஸர்?

செய்திகள் 25-Apr-2016 10:31 AM IST VRC கருத்துக்கள்

‘தெறி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிற படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர், ஜான் விஜய் முதலானோர் நடிக்கும் இப்படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக இப்படத்திற்கு டப்பிங் பேசி வந்த ரஜினிகாந்த் தனது டப்பிங் வேலைகளை நேற்று முன் தினம் முடித்து விட்டார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீஸரை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் ‘கபாலி’ படக்குழுவினர். அநேகமாக அஜித் பிறந்த நாளான மே-1 ஆம் ‘கபாலி’யின் டீஸர் ரசிகர்களின் பார்வைக்கு வந்து விடும் என்கிறார்கள். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘கபாலி’ மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;