கமல்ஹாசன் வெளியிட்ட ‘மோ’ டீஸர்!

கமல்ஹாசன் வெளியிட்ட ‘மோ’ டீஸர்!

செய்திகள் 23-Apr-2016 12:43 PM IST VRC கருத்துக்கள்

சன் மியூசிக் வர்ணனையாளர் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, ரமேஷ் திலக், செல்வா, ராமதாஸ் (முனீஸ் காந்த்), ‘மைம்’ கோபி முதாலோர் நடிக்கும் படம் ‘மோ’. WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமென்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயரிக்கும் இப்படத்தின் டீஸரை இன்று காலை கமல்ஹாசன் வெளியிட்டு, படக்குழுவினரை பாராட்டினார்ர்.

இப்படத்தை புவன் நல்லான் R என்னும் புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வா மற்றும் ஹோஷிமின் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமனியனிடம் இணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணுஸ்ரீ .கே ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘இனிமே இப்படிதான்’ திரைப்படத்திற்கு இசை அமைத்தவரும், ஏ.ஆர். ரஹ்மானின் உதவியாளருமான சமீர் டி. சந்தோஷ் இசையமைக்கிறார். கலையை பாலசுப்ரமனியனும் படத்தொகுப்பு கோபிநாத்தும் செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;