‘உன்னோடு கா’வின் கதை என்ன?

‘உன்னோடு கா’வின் கதை என்ன?

செய்திகள் 23-Apr-2016 10:47 AM IST VRC கருத்துக்கள்

‘அபிராமி’ ராமநாதன் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘உன்னோடு கா’. அறிமுக இயக்குனர் ஆர்.கே.இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.சத்யா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னியிலுள்ள அபிராமி மெகாமாலில் நடைபெற்றது. அப்போது ‘அபிராமி’ ராமநாதன் கூறும்போது, ‘‘நீண்ட நாட்களாக ஒரு முழுநீள் நகைச்சுவை படம எடுக்க வேண்டும் என்ற எண்னம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அந்த எண்ணம் தான் ‘உன்னோடு கா’ திரைப்படம். கோடை விடுமுறை காலத்தில் ஜாலியாக பார்க்க கூடிய ஒரு படமாக ‘உன்னோடு கா’ உருவாகியுள்ளது. இதுவரை வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களிலும் காதலை எதிர்க்கும் பெற்றோர்களை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் காதலை சேர்த்து வைக்கப் போராடும் பெற்றோர்களை ரசிகர்கள் பார்க்கலாம் இது தான் ‘உன்னோடு கா’வின் கதை கரு’’ என்றார்.

இப்படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்க, மாயா, மிஷா கோஷல் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, ஊர்வசி, தென்னவன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளன்ர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவர்கள் - டீஸர்


;