‘சென்னை-600028’ஐ தொடர்ந்து ‘சரோஜா-2’

‘சென்னை-600028’ஐ தொடர்ந்து ‘சரோஜா-2’

செய்திகள் 23-Apr-2016 10:04 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008-ல் வெளியான காமெடி த்ரில்லர் படம் ‘சரோஜா’. ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் வெற்றிப் படமாக அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘மங்காத்தா’ படத்தில் வெங்கட் பிரபுவுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஏ.ஜெ.ஸ்கந்த ப்ரியன் இப்படத்தை இயக்கவிருக்கிறார். சரோஜாவிற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவும், படத்தொகுப்பு செய்த பிரவீனும் இப்படத்திலும் இணையவிருக்கின்றனர். இப்பட்த்தின் கதையை சமரன் எழுத, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை-600028’ வின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிற அதே நேரத்தில் அவர் இயக்கிய ‘சரோஜா’வின் இரண்டாம் பாகாவும் உருவாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;