வெற்றிவேல் - விமர்சனம்

பழைய கதை, பழைய சசி, புதிய படம்!

விமர்சனம் 22-Apr-2016 3:45 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vasantha Mani
Production : Trident arts
Starring : M. Sasikumar, Miya George, Thambi Ramaiah, Nikila Vimal, Prabhu
Music : D. Imman
Cinematography : S. R. Kathir
Editing : A.L.RAMESH

‘தாரை தப்பட்டை’ படத்திற்காக 2 வருடங்களை தாரைவார்த்த சசிகுமார், உடனடியாக ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தாக வேண்டிய சூழலில், பரபரப்பாக களத்தில் இறங்கி அதிரிபுதிரியாக ‘வெற்றிவேல்’ படத்தைக் கொடுத்திருக்கிறார். ‘வெற்றி’ வேல்தானா?

கதைக்களம்

தம்பியின் காதலுக்கு உதவப்போய் தன் காதலை பறிகொடுத்த அண்ணனின் கதைதான் இந்த வெற்றிவேல்.

படம் பற்றிய அலசல்

தன்னுடைய ஏரியா பி அன்ட் சி தான் என்பதை உணர்ந்து, ‘வெற்றிவேல்’ மூலம் திட்டமிட்டு களத்தில் குதித்திருக்கிறார் சசிகுமார். நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி ஆகிய படங்களின் கதைக்களத்தை ஒத்த ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதில் வழக்கமான சசிகுமார் பட கமர்ஷியல் விஷயங்களை தூவி, ‘வெற்றிவேல்’ படத்தை சமர்ப்பித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வசந்தமணி. ஹீரோ அறிமுகப் பாடல், தம்பி ராமையாவின் காமெடி, தம்பியின் காதலில் பிரச்சனை, அதைத் தீர்க்கப்போய் தனக்கு முளைக்கும் இன்னொரு சிக்கல் என முதல்பாதியில் படம் கொஞ்சம் விறுவிறுப்பாகவே பயணிக்கிறது. குறிப்பாக இடைவேளையின்போது ஹீரோவுக்கு எழும் சூழலும், அதை அவர் கையாளும் விதமே படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

ஆனால், இரண்டாம்பாதியில் இந்த கதை இப்படித்தான் நகரும், இதுபோன்ற ‘ட்விஸ்ட்’டுகள் வரும் என்பதை ரசிகர்கள் முன்கூட்டியே யூகித்துவிட முடிவதால் பெரிய சுவாரஸ்யம் தரவில்லை. க்ளைமேக்ஸும் வழக்கமான சசிகுமார் பட ஸ்டைலில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அடிவாங்கி, மீண்டும் திருப்பி அடித்து, வில்லன்களை உயிரோடு விட்டுவிட்டு வசனம் ஒன்றைப் பேசிவிட்டு சுபம் போடுகிறார்கள். பாடல்கள் கைகொடுக்கவில்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்குத் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. தம்பி ராமையாவின் விரசமான காமெடிக்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிப்பது தமிழ் சினிமாவிற்கு நல்லதல்ல. வேறு வகையில் ரசிகர்களை சிரிக்க வைக்க இயக்குனர் முயற்சித்திருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

சசிகுமாருக்கு ஏற்ற கேரக்டர்தான். எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே தன் முந்தைய படங்களின் ஹீரோவாக வந்து போகிறார் சசி. ஆனாலும் ரசிக்க வைக்கிறார். எனினும், அடுத்த படத்தில் அவரை வேறொரு பரிணாமத்தில் பார்க்கவே ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஹீரோயின் மியா ஜார்ஜ் ‘பாதி நாயகி’யாக இடைவேளை வரை தலைகாட்டி மறைகிறார். இந்த கேரக்டருக்கு அவரை எப்படி சம்மதிக்க வைத்தார்கள் என்பது ஆச்சரியமே. சாதாரணமாக கதைக்குள் நுழைந்த அறிமுக நாயகி நிகிலா விமல் இரண்டாம்பாதியில் படத்தின் ஹீரோயினாக மாறுகிறார். சசிகுமார் தம்பியாக நடித்த ஆனந்த் நாக், அப்பா இளவரசு, அம்மா ரேணுகா, பிரெசிடென்ட்டாக வரும் பிரபு ஆகியோருக்கு கதைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கின்றன. நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ‘ஆரோகணம்’ விஜி சந்திரசேகர் வில்லியாக வந்து மிரட்டியிருக்கிறார். சமுத்திரக்கனியின் என்ட்ரி நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும்.

பலம்

1. பி அன்ட் சி ஆடியன்ஸை குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் காட்சியமைப்புகள்
2. சர்ப்ரைஸ் சமுத்திரக்கனி
3. படத்தின் முதல்பாதி

பலவீனம்

1. ‘டெம்ப்ளேட்’ கதை
2. பாடல்கள்
3. யூகிக்கக்கூடிய இரண்டாம்பாதியும் க்ளைமேக்ஸும்

மொத்தத்தில்...

இதே ஃபார்முலாவில் சசிகுமாரின் அடுத்த படம் நிச்சயம் இருக்காது என்ற நம்பிக்கையோடு, இப்படம் பி அன்ட் சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப்பெற வாழ்த்துவோம்!

ஒரு வரி பஞ்ச் : பழைய கதை, பழைய சசி, புதிய படம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - மோஷன் போஸ்டர்


;