பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’, ராம் இயக்கும் ‘தரமணி’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஆன்ட்ரியா, மலையாள ‘மெகா ஸ்டார்’ மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே ஃபஹத் ஃபாசில், பிருத்திவி ராஜ், மோகன்லால் முதலானோருடன் இணைந்து மலையாள படங்களில் நடித்துள்ள ஆன்ட்ரியா, மம்முட்டியுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘தோப்பில் ஜோப்பன்’ என்று பெயரிட்டுள்ளனர். ஜானி ஆன்டனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கொச்சியில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. த்ரிஷா முதன்...