‘தெறி’ 6 நாட்களில் 100 கோடி வசூல்?

‘தெறி’ 6 நாட்களில் 100 கோடி வசூல்?

செய்திகள் 22-Apr-2016 3:10 PM IST VRC கருத்துக்கள்

ஒவ்வொரு முன்னணி நடிகர்கள் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் ரிலீசாகி இவ்வளவு வசூல் செய்யப்பட்டது, வசூலில் சாதனை படைத்தது என்பது போன்ற தகவல்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி (ஏப்ரல்-14) வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்திற்கும் உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், வசூலில் சாதனை படைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 14-ஆம் தேதி வெளியான ‘தெறி’, 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. அந்த விளம்பரத்தை ‘தெறி’ பட இயக்குனர் அட்லி, ரீ-ட்வீட்டு செய்து, அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் ‘தெறி’ திரைப்படம் வெளியாகவில்லை என்றாலும், மற்ற அனைத்து ஏரியாக்களிலும் படம் நல்ல வசூலை தந்துகொண்டிருக்கிறது என்றும், அந்த வசூல் விவரங்களை விளம்பரங்கள் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்த இருப்பதாகவும் ‘தெறி’ யின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு ஒரு பேட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;