மணிரத்னம் படம் - சாய் பல்லவியின் விளக்கம்!

மணிரத்னம் படம் - சாய் பல்லவியின் விளக்கம்!

செய்திகள் 21-Apr-2016 1:24 PM IST VRC கருத்துக்கள்

‘ஓகே கண்மணி’ வெற்றிப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ‘பிரேமம்’ படப் புகழ் சாய் பல்லவி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து சாய் பல்லவி திடீரென்று விலகி விட்டார் என்ற ஒரு தகவல் கோலிவுட்டில் ரெக்கை கட்டி பறந்தது. அத்துடன் மணிரத்னம் படத்திலிருந்து சாய் பல்லவி விலகியதற்கான காரணம் குறித்தும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாக, நடந்த உண்மையை விளக்கும் விதமாக சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

மணிரத்னம் சார் படம் சம்பந்தமாக உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன! அதற்கு நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். யாரும் மணி சார் படத்திலிருந்து விலக மாட்டார்! அவர் பெரிய ஒரு இயக்குனர். அவர் உருவாக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பானதாக இருக்கும். மணி சார் அடுத்து இயக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை மேலும் மேலும் செதுக்கி உருவாக்கியதால், அதில் இடம்பெறும் அந்த மெச்சூர்டான கேரக்டருக்கு நான் பொருந்தாது என்பதை அவர் நினைத்திருக்கிறார். அதை அவர் பொறுமையுடன் எனக்கு விளக்கிக் கூறவும் செய்தார். மணிரத்னம் சார் மாதிரி ஒரு பெரிய இயக்குனர் இப்படி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை! அது அவருடைய பெரிய மனசை தான் காட்டுகிறது. எல்லோரும் எதிர்பார்ப்பது போல் நானும் மணி சார் அடுத்து இயக்கும் படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;