விதார்த், ரவீணா நடிக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

விதார்த், ரவீணா நடிக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

செய்திகள் 21-Apr-2016 12:40 PM IST VRC கருத்துக்கள்

பெரும் பொருட் செலவில் பல திரைப்படங்களை தயாரித்த ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. இப்படத்தில் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, கதாநயகியாக டப்பிங் கலைஞர் ரவீணா நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் இப்படம் குறித்து ஈராஸ் நிறுவனத்தின் தென்னக பிரிவின் தலைவர் சாகர் சத்வானி கூறும்போது,

‘‘ தற்போது நாங்கள் பிராந்திய மொழி படங்களை தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து, நிறைய திறமை சாலிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். அப்படியான ஒரு முயற்சியில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ கதையை கேட்டபோது அதை படமாக தயாரிக்க முடிவு செய்தோம். இந்த கதையை இயக்குனர் சுரேஷ் சாங்கையா கூறும்போதே நாங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தோம். அப்படி ஜாலியான ஒரு ஸ்கிரிப்ட் இது. ‘மைனா’, ‘ஆள்’, ‘வீரம்’ மற்றும் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ‘குற்றமே தண்டனை’ முதலான படங்களில் நடித்திருக்கும் விதார்த் இந்த கதைக்கு மிகப் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளோம். படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தை தொடர்ந்து மேலும் பல பிரம்மாண்ட படங்களை. சிறிய முதலீடு படங்களை தயாரிக்க ‘ஈராஸ்’ நிறுவன்ம் முடிவு செய்துள்ளது’’ என்றார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’வின் ஒளிப்பதிவு பொறுப்பினை ஆர்.எஸ்.சரண் கவனிக்க, ரகுராம் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;