சக்தி வாசு, கணேஷ் வெங்கட் ராம் இணையும் படம்!

சக்தி வாசு, கணேஷ் வெங்கட் ராம் இணையும் படம்!

செய்திகள் 21-Apr-2016 12:07 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் வாசுவின் மகன் சக்தி வாசு, கணேஷ் வெங்கட் ராம் இணைந்து நடிக்கும் படம் ‘7 நாட்கள்’. இப்படத்தை சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கௌதம் வி.ஆர். இயக்குகிறார். கதாநாயகிகளாக நிகிஷா பட்டேல், அங்கனா ராய் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி முதலானோரும் நடிக்கிறார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் காவல் துறையினருக்கு பெரும் உதவியாக இருப்பது CCTV கேமராவும், மொபைல் ஃபோனும் தான். இந்த இரண்டு விஷயங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கவனித்தால் தெரிந்து விடும்.

’7 நாட்கள்’ படம் குறித்து இயக்குனர் கௌதமிடம் கேட்டபோது, ‘இது அனைத்து விஷயங்களும் கலந்த ஒரு ஆக்‌ஷன் கிரைம் த்ரில்லர் படம்’ என்றார். இவர் இயக்குனர் பி.வாசுவின் தம்பி விமல் பீதாம்பரத்தின் மகனாவார். ‘7 நாட்கள்’ கதையை விமல் பீதாம்பரம் எழுதியிருக்க, அதனை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் கௌதம் வி.ஆர். ‘மில்லியன் டாலர் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கார்த்திக், கார்த்திகேயன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் வளாகத்தில் நடைபெற்றது. இன்னும் ஒரு சில நாட்களில் இப்படத்தின்a படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்


;