விஜய் போல வருவார்! ‘சாரல்’ ஹீரோவுக்கு விக்ரமன் பாராட்டு!

விஜய் போல வருவார்! ‘சாரல்’ ஹீரோவுக்கு விக்ரமன் பாராட்டு!

செய்திகள் 21-Apr-2016 9:55 AM IST VRC கருத்துக்கள்

விக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ’ படத்தில் நடித்தவரும், ஆதித்யா டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அசார் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘சாரல்’. இப்படத்தில் அசாருக்கு ஜோடியாக ‘கங்காரு;, ‘வந்தாமலை’, ‘கதிரவனின் கோடை மழை’ ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் டி.ஆர்.எல். (டி.ஆர்.லாசர்) இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இஷான் தேவ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் விஜய்சேதுபதி, விவேக், இயக்குனர் விக்ரமன், இசை அமைப்பாளர் ரெஹைனா முதலானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். காதல் கதையாக உருவாகியிருக்கும் ‘சாரல்’ படத்திற்காக முருகன் மந்திரம், புகைப்பட கலைஞர் குணா, ஸ்பீடு ஜான்சன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

விழாவில் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் திரையிடப்பட்டது, இஷான் தேவ் இசையில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் இனிமையாக அமைந்திருந்தது. பாடல்கள் குறித்து இசை அமைப்பாளர் ரெஹைனா கூறும்போது, ‘‘தீபக் தேவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலம் உண்டு! இப்படத்தின் கதாநாயகன் அசாரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். ஜி.வி.பிரகாஷ் மட்டும் எனக்கு மகன் அல்ல, அசாரும் எனக்கு மகன் தான்’’ என்றார்.
பாடல்களை வெளியிட்ட விக்ரமன் அசாரை வாழ்த்திப் பேசும்போது, ‘நான் ‘பூவே உனக்காக’ படத்தை இயக்கும்போது அதில் விஜய் எப்படி எல்லாம் ஆர்வம் கொண்டு நடித்தாரோ, அதைப்போன்ற ஒரு ஆர்வமும், சுறுசுறுப்பும் ‘நினைத்தது யாரோ’ படத்தில் அசார் நடிக்கும்போது அவரிடம் கண்டேன். அசாரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு விஜய் ஞாபகம் தான் வரும். இப்படத்தின் மூலம் அசாரும் நிறைய படங்களில் நடித்து எதிர்காலத்தில் விஜய் போல புகழ் பெற வாழ்த்துக்கள்’’ என்றார்.

விக்ரமனை தொடர்ந்து விஜய்சேதுபதி, விவேக் முதலானோரும் வாழ்த்தி பேசினார்கள். ரெயின்போ மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் V.A.A.R. கடிகை தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை சங்கரலிங்கம் செல்வகுமார் ஏ|ற்றுள்ளார். இப்படத்தில் அசார், ஸ்ரீப்ரியங்காவுடன் .கே.பி.கோபாலகிருஷ்ணன், காதல் சுகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன், கோவை பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது சாரல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;