‘49ஓ’ படத்தை தொடர்ந்து கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருகும் படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கணபதி பாலமுருகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கவுண்டமணி பேசும்போது,
‘‘இப்போது சினிமாவில் சில பிரச்சனைகள் இருந்து வருகிறது. இப்போது வெளியாகிற படங்களில் பெரும்பாலான படங்கள் ஓடுவதில்லை! இப்போது யாரும் தியேட்டருக்கு வருவதில்லை என்று சொல்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இப்போது சினிமா பார்க்க வருபவர்களை விட சினிமாவில் நடிப்பவர்கள் அதிகமாகி விட்டது. அதனால் படங்கள் தயாரிப்பும் அதிகமாகி விட்டது. படங்கள் அதிகமாக ரிலீசாவதால நிறைய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கிடையாது. அப்படி தியேட்டர் கிடைத்தாலும் அந்த படம் அந்த தியேட்டரில் ஒரு ஷோ மட்டும் தான் திரையிடப்படுகிறது. ஒரு தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறது என்று நினைத்து காலை 10 மணி ஷோவுக்கு போனால், இங்கு சாயங்காலம் ஷோ தான் இருக்கிறது என்று சொல்வார்கள். அந்த தியேட்டரிலிருந்து வேறு ஒரு தியேட்டருக்கு அந்த படத்தை பாரக்கப் போனால் இங்கு அந்த பட ஷோ காலையிலேயே முடிந்து விட்டது என்பார்கள். மூன்றாவதாக ஒரு தியேட்டருக்கு போனால், ‘சார் அந்த படம் நேற்றே தியேட்டரிலிருந்து எடுத்து விட்டோம்’ என்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படி ஒரு படம் ஓடும்? எப்படி படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்? இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடு கொண்டு வரணும். அப்போது தான் சினிமா ஓடும். அப்போது தான் சினிமாவை நம்பி இருப்பவர்கள் வாழ முடியும், ஜெயிக்க முடியும்.
‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படம் ஒரு கேரவேனுக்குள் நடக்கிற கதை. இப்போது ஜாதி விட்டு ஜாதியில் திருமணம் செய்து கொள்வதும், வீட்டை விட்டு ஓடி வருவதும், ஜாதி மாறி திருமணம் செய்வதால் கொலைகள் நடப்பதும் அதிகமாகிவிட்டது. இந்த கரண்ட் மேட்டரை வைத்து தான் இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
செங்கல்பட்டில் இருந்து புறப்படும் கேரவேன் மதுரை வரை பயணமாகிறது. அந்த பயணத்தில் அந்த கேரவேனுக்குள் நடக்கும் சம்பவங்களும், மதுரையில் நடக்கும் கிளைமேக்ஸும் தான் படத்தின் ஹைலைட்ஸ். சுருக்கமாக இப்படத்தை பார்த்து தியேட்டரை விட்டு வெளியியே வருகிற ரசிகர்கள் மனதில் எந்த மாதிரியான ஒரு ஃபீலிங் இருக்கும் என்றால் ஒரு பீட்சா சாப்பிடு, அதற்கு மேல் ஒரு சிக்கன் பர்கர் சாப்பிட்டு, பிறகு ஜில்லுன்னு ஒரு கோக் சாப்பிட்டு விட்டு, பிறகு ஒரு பீடாவும் சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்’’ என்றார் கவுண்டமணி!
இப்படத்தில் கவுண்டமணியுடன் காதல் ஜோடியாக சௌந்தர், ரித்திகா ஆகியோர் நடிக்க, இப்படத்தை ‘ஜே.பி.ஜெயராம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜெ.சண்முகம் தயாரித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...