‘24’ படத்தின் கான்செப்ட் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும்! - சூர்யா

‘24’ படத்தின் கான்செப்ட் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும்! - சூர்யா

செய்திகள் 20-Apr-2016 10:58 AM IST Chandru கருத்துக்கள்

வழக்கமாக ஒரு படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருப்பார்கள். ஆனால், சூர்யா தயாரித்து நடித்து வரும் மே 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘24’ படத்திற்கு கடந்த வாரத்திலிருந்தே டிவி விளம்பரம், பத்திரிகை விளம்பரம் என புரமோஷன்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன. படத்தின் ஹீரோ என்பதைத் தாண்டி, தயாரிப்பாளரும் அவரே என்ற முறையில் ‘24’ படத்தை விளம்பரம் செய்வதில் மும்முரமாக ஈடுபாடுகாட்டி வருகிறார் சூர்யா. டீஸர், டிரைலர், பாடல்கள் என படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் உற்சாகத்திலிருக்கிறார் சூர்யா. இப்படம் குறித்து பேசிய சூர்யா,

‘‘அவ்வப்போது வித்தியாசமான கதைகளைத் தாங்கிய சில நல்ல படங்கள் மலையாள திரையுலகத்திலிருந்து வருவதை கேள்விப்பட்டு வருகிறோம். தமிழிலும் அதுபோன்ற சில படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை நிச்சயமாகக் கூறலாம். ஆனால், பெரும்பாலும் அப்படிப்பட்ட படங்கள் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் பெறுவதில்லை. காரணம், அப்படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, அதிக அளவில் விளம்பரம் செய்யப்படாததுதான். ஆனால், ‘24’ அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கதையோடு வெளிவரும் பிரம்மாண்டப் படம் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் புதிய கான்செப்ட்டுடன் உருவாகியுள்ளது என நிச்சயமாகச் சொல்லலாம்!’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;