தங்கமகனைத் தொடர்ந்து ‘ரெமோ’வில் இணைந்த பிரபல இயக்குனர்!

தங்கமகனைத் தொடர்ந்து ‘ரெமோ’வில் இணைந்த பிரபல இயக்குனர்!

செய்திகள் 20-Apr-2016 10:34 AM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் இயக்குனராக வெற்றிகரமான படங்களைக் கொடுத்துக் கொண்டே இன்னொருபுறம் ‘கேரக்டர்’ ரோல்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுவதில் கே.எஸ்.ரவிகுமார் கில்லாடி. அந்தவகையில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தங்கமகன்’ படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார் ரவிகுமார். அதனைத் தொடர்ந்து, இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘ரெமோ’ படத்திலும் முக்கிய வேடமொன்றிலும் நடித்து வருகிறாராம் அவர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் காமெடியனாக நடிக்கிறார். பி,சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

கே.எஸ்.ரவிகுமாரின் நேர்மையையும், தொழில்பக்தியையும் பாராட்டி ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் 24 ஏஎம் ஸ்டியோஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆ.டி.ராஜா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;