பி அன்ட் சி ஆடியன்ஸ் குறிவைக்கும் வெற்றிவேல்!

பி அன்ட் சி ஆடியன்ஸ் குறிவைக்கும் வெற்றிவேல்!

முன்னோட்டம் 20-Apr-2016 10:26 AM IST Chandru கருத்துக்கள்

சசிகுமார் படங்களுக்கு எப்போதும் பி அன்ட் சி ஆடியன்ஸிடம் பெரிய வரவேற்பிருக்கும். அவருடைய சுப்பிரமணியபுரம், நாடோடிகள், போராளி, குட்டிப்புலி போன்ற படங்கள் ஏ சென்டரைவிட பி அன்ட் சியில் பெரிதாக கல்லா கட்டியது. அந்தவகையில், ‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகி, வரும் 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘வெற்றிவேல்’ படமும் பி அன்ட் சி ஆடியன்ஸையே பெரிதும் நம்பி களத்தில் குதிக்கிறது.

அறிமுக இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, சமுத்திரக்கனி, தம்பி ராமையா உட்பட பல நட்சத்திரங்கள் கைகோர்த்திருக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ட்ரிடென்ட் ஆர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது லைக்கா புரொடக்ஷன்ஸ்.

சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கியுள்ள இப்படம் 2 மணி 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது. ‘தெறி’ படத்தைத் தவிர வேறெந்த பெரிய படங்களும் தற்போது களத்தில் இல்லாததால் ‘வெற்றிவேல்’ படத்திற்கு தமிழகத்தில் மட்டுமே 200க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, ‘தெறி’ படம் செங்கல்பட்டு ஏரியாவில் எந்த திரையரங்கிலும் வெளியிடப்படாததால், அந்த திரையரங்கள் பெரும்பாலானவற்றை ‘வெற்றிவேல்’ கைப்பற்றியுள்ளது. இதனால் செங்கல்பட்டு ஏரியாவில் இப்படம் பெரிய வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;