‘தெறி’ விவகாரம் - தயாரிப்பாளர் தாணு பரபரப்பு புகார்!

‘தெறி’ விவகாரம் -  தயாரிப்பாளர் தாணு பரபரப்பு புகார்!

செய்திகள் 19-Apr-2016 5:19 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ திரைப்படம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் வெளியிடப்படவில்லை. இதற்கு பின்னணியில் ஒரு முக்கிய நபர் இருந்து செயல்பட்டு வருகிறார் என்று அவரது பெயரை குறிப்பிடாமல் ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு சமீபத்தில் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்னமும் முடிவுறாத இந்த பிரச்சனை குறித்து ‘கலைப்புலி’ எஸ்.தாணு இன்று மீண்டும் மீடியாவை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை கூறினார்! அதன் விவரம் வருமாறு:
‘‘சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்தின் திரையீட்டு சம்பந்தமாக நான் மனரீதியாக மிகவும் பாதிக்கபட்டுள்ளேன். இதற்கு காரணம் ஒரே ஒரு நபர் தான்! அவர் யார் என்றால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் அவர்கள் தான்! ‘தெறி’ படத்தை நான் முபையிலுள்ள இம்பாசிபிள் ஃபிலிம் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டேன். அந்த நிறுவனத்திடமிருந்து சென்னையிலுள்ள எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவன்ம் ‘தெறி’யை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றது. அதனால் ‘தெறி’யின் செங்கல்பட்டு ஏரியா வியாபாரத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நான் சில உண்மைகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

செங்கல்பட்டு ஏரியாவிலுள்ள தியேட்டர்களில் ‘தெறி’ படத்தை வெளியிடாமல் பன்னீர் செல்வம் அவர்கள் தடுத்ததற்கான காரணம், அவரது மகனுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னால் திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு விஜய்யையும், ரஜினிகாந்தையும் அவர் அழைத்திருந்தார். ஆனால் அந்த திருமணத்திற்கு ரஜினிகாந்தும், விஜய்யும் செல்லவில்லை. அந்த திருமணம் நடக்கும்போது விஜய்யும், ரஜினிகாந்தும் வெளிநாடுகளில் இருந்த காரணத்தால் அவர்களால் அவர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. இதை மனதில் வைத்து தான் அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக விஜய் நடித்த படத்தை வெளியிடுவதில் தியேட்டர் அதிபர்களை ஒருங்கிணைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளார். உண்மையில் இந்த விஷயத்தில் இப்போது சிக்கித் தவிப்பவர்கள் அவரது சூழ்ச்சியான பேச்சை கேட்டு நடந்துகொண்ட தியேட்டர் உரிமையாளர்கள் தான்! ‘தெறி’ உலகம் முழுக்க வெளியாகி வசூலில் பல சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியிட்ட எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதை கேள்விபட்டு, செங்கல்பட்டு ஏரியாவிலுள்ள் சில தியேட்டர் உரிமையாளர்கள் எனக்கு ஃபோன் செய்து வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்.

இப்படி நல்ல வசூல் செய்ய கூடிய ஒரு படத்தை திரையிட விடாமல் தடுத்து சூழ்ச்சி செய்யும் பன்னீர் செல்வத்தின் செயல் சினிமாவை அழிக்கும் செயலாகும்! இது சினிமாவில் இருந்துகொண்டே அவர் சினிமாவுக்கும், சினிமாவை நம்பி இருப்போருக்கு செய்யும் பெரும் துரோகம் ஆகும். அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன், தயவு செய்து பெரிய பதவியில் இருந்து கொண்டு உங்கள் சுயநலத்துக்காக சினிமாவை அழித்து விடாதீர்கள்! நீங்கள் செய்யும் சூழ்ச்சிக்கும், அந்நியாத்திற்கும் காலம் பதில் சொல்லும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;