‘தெறி’ விநியோக விவகாரம் : இயக்குனர் அமீர் விளக்கம்!

‘தெறி’ விநியோக விவகாரம் : இயக்குனர் அமீர் விளக்கம்!

செய்திகள் 19-Apr-2016 1:08 PM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்தின் மதுரை ஏரியா விநியோக உரிமையை இயக்குனர் அமீர் கைப்பற்றியிருக்கிறார். இந்நிலையில், ‘தெறி’ பட விநியோகம் குறித்து இயக்குனர் அமீர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதனை மறுத்து விளக்கம் கொடுத்துள்ளார் அமீர். இந்த விவகாரம் குறித்த அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர். அதில்,

‘‘என் அன்பிற்குரிய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும். திரு விஜய் ரசிகர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது.

திரு. விஜய் அவர்களின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் ‘தெறி’ திரைப்படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள்முதல் வந்து கொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் ‘தெறி’ திரைப்பட விநியோகம் குறித்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தியை பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன்.

என்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கமோ அல்லது ட்விட்டர் பக்கமோ நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில் உள்ள முகநூல் பக்கமோ அல்லது ட்விட்டர் பக்கமோ என்னுடையது அல்ல. யாரோ சி தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

19.04.2016
சென்னை

அன்புடன்
அமீர்’’

என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;