50 லட்சம் லைக்... நன்றி சொன்ன விஜய்!

50 லட்சம் லைக்... நன்றி சொன்ன விஜய்!

செய்திகள் 19-Apr-2016 12:11 PM IST Chandru கருத்துக்கள்

தனது ரசிகர்களை அவ்வப்போது நேரில் சந்தித்து உரையாடுவது மட்டுமின்றி, சமூக வலைதளங்களின் மூலம் அன்றாடம் தொடர்பில் இருப்பவர் ‘இளையதளபதி’ விஜய். ‘ஆக்டர் விஜய்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றும், ட்விட்டர் அக்கவுன்ட் ஒன்றும் அதிகாரபூர்வமாக விஜய் மூலம் கவனிக்கப்பட்டு வருகிறது. 2013ல் துவங்கப்பட்ட ‘ஆக்டர் விஜய்’ ஃபேஸ்புக் பக்கத்திற்கு தற்போது 5 மில்லியன் லைக்ஸ் (50 லட்சம்) கிடைத்துள்ளது. தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு சாதனைதான். நடிகைகளின் அதிகாரபூர்வ பக்கங்களுக்கு லைக்ஸ் கிடைப்பது வாடிக்கையான நடப்பதுதான். ஆனால், ஒரு தமிழ் நடிகரின் பக்கத்திற்கு இத்தனை லட்சம் லைக்ஸ் கிடைத்திருப்பது, அவருக்கிருக்கும் பரந்துவிரிந்த ரசிகர் வட்டாரத்தையே எடுத்துக்காட்டுகிறது.

50 லட்சம் ரசிகர்கள் தன் பக்கத்தை ‘லைக்’ செய்திருப்பதற்கு நடிகர் விஜய்யும், ஸ்டேட்டஸ் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் விஜய்யை கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;