மோகன் லால் பட தயாரிப்பாளரின் களம்!

மோகன் லால் பட தயாரிப்பாளரின் களம்!

செய்திகள் 19-Apr-2016 12:01 PM IST VRC கருத்துக்கள்

‘அருள் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் பி.கே.சந்திரன், சுபீஷ் சந்திரன் தயாரித்து, ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ பி.மதன் தமிழகம் முழுக்க வெளியிடவிருக்கும் படம் ‘களம்’. அறிமுக இயக்குனர் ராபர்ட் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அம்ஜத் கான், லட்சுமி ப்ரியா, ஸ்ரீனிவாசன், நாசர், மதுசூதனன் ராவ், பூஜா, கனி குஸ்ருதி, பேபி ஹியா முதலானோர் நடித்துள்ளார்கள்.

‘‘இப்படம் மாறுபட்ட ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியிருப்பதோடு படத்தில் நல்ல ஒரு மேசேஜும் உண்டு! 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களை இந்த ‘களம்’ ஏமாற்றாது’’ என்று கூறும் இப்படத்தின் இயக்குனர் ராபர்ட் ராஜ், சில விளம்பர படங்களை இயக்கி இப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனாரக களமிறகுகிறார். ‘களம்’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு ஒரு பங்களாவுக்குள்ளே நடைபெற்றுள்ளது. முகேஷ் ஜி.ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரகாஷ் நிக்கி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுபீஷ் சந்திரனே எழுதியுள்ளார்.

இப்படத்தை தயாரித்திருக்கும் பி.கே.சந்திரன், ஏற்கெனவே மோகன் லால் நடிப்பில் ‘பகவான்’ என்ற மலையாள படத்தையும், தமிழில் ‘மாணவன் நினைத்தால்’ என்ற படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிட்த்தக்கது. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ‘களம்’ படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார். ‘களம்’ படம் குறித்து அவர் கூறும்போது, ‘‘இப்படத்தின் கதையை படித்ததும் என்னை ரொம்பவும் பாதித்தது! திரைப்பட தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த என்னை மீண்டும் தயாரிப்பாளராக்கியது இந்த கதையின் களம் தான்! திட்டமிட்டு குறைந்த நாட்களில் இப்படத்தை எடுத்து முடித்துள்ளோம். வரிசையாக நிறைய ஹாரர் படங்கள் வருகிறது. இதில் என்ன வித்தியாசம் என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விக்கான பதில் இப்படத்தில் இருக்கும். இப்படத்தை பார்த்ததும் ‘இந்த படத்தை நாங்கள் வெளியிடுகிறோம்’ என்று சொல்லி வாங்கினார் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் அவர்கள்! இது ‘களம்’ படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி! இப்படம் இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;