காமெடி வில்லனாக பவர் ஸ்டார் நடிக்கும் படம்!

காமெடி வில்லனாக பவர் ஸ்டார் நடிக்கும் படம்!

செய்திகள் 19-Apr-2016 10:49 AM IST VRC கருத்துக்கள்

‘அதிசய உலகம்’ படத்தை தயாரித்த ‘டிட்டு புரொடக்‌ஷன்ஸ்’ ஆர்.பானுசித்ரா தயாரிக்கும் அடுத்த படம் ‘ஜெயிக்கப் போவது யாரு?’. இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகனாக ஷக்தி ஸ்காட் நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா அறிமுகமாகிறார். இவர்களுடன் சைதன்யா, அத்வித், ஷ்யாம் சுந்தர் சதீஷ் ராமகிருஷ்ணன், கோட்டி, வெங்கட், சோனல் பானர்ஜி, சையத் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து நடித்து இயக்கும் ஷக்தி ஸ்காட் படம் குறித்து பேசும்போது,

‘‘அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டாலும் இன்று திருட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது கார் ரேஸ், பைக் ரேஸ்! இதில் எத்தனையோ பேர் பலியாகி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ‘ஜெயிக்கப் போவது யாரு?’ படத்தில் இந்த ரேஸ் விஷயத்தை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி இருக்கிறோம். ஐந்து குரூப்பை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். மூன்று கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு ஜீப் இதை வைத்து சீரியஸான விஷயத்தை காமெடியாக சொல்லி இருக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், திண்டிவனம், ஆற்காடு ஆகிய இடங்களில் நடந்துள்ளது. பட வேலைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீன் குழம்பும் மண் பானையும் - டிரைலர்


;