நாய்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் படம்!

நாய்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் படம்!

செய்திகள் 19-Apr-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட படஙக்ளை விநியோகம் செய்ததுடன் தியேட்டர்களையும் நடத்தி வரும் ஏ.வெற்றிவேல் தனது ‘வெற்றிவேல் 576 மெகா பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘நாய்க்குட்டி படம்’. இதில் டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். காதலர்களாக நிதின் சத்யா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், மகாநதி சங்கர், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி, ஜெயமணி, போண்டா மணி, கிங் காங், மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ரங்கா. இவர் இயக்குனரகள் எஸ்.டி.ரமேஷ் செல்வன், சித்திரை செல்வன், எல்.ஜி.ரவிசங்கர் ஆகியோரிடம் உதவியாளரக பணிபுரிந்தவர்.

இந்த படம் குறித்து இயக்குனர் ரங்கா கூறும்போது, ‘‘மக்கள் ஒரே மாதிரியான கதைகளை விரும்புவதில்லை. புதுசாக இருந்தால் தான் பார்க்கிறார்கள். அதற்காக யோசித்து உருவாக்கிய கதை தான் இது. நிதின் சத்யா வளர்க்கும் நாய் டோனி, ஸ்ருதி ராமகிருஷ்ணன் வளர்க்கும் நாய் ஜீனோ. இந்த நாய்க்குட்டிகளில் டோனி திடீரென்று காணாமல் போய் விடுகிறது. அந்த நாயை தேடி நிதின் சத்யா ஒரு பக்கம் அலைகிறார். இன்னொரு பக்கம் நான்கு திருடர்கள், அத்துடன் அரசியல் வாதிகள் இருவர்…. இப்ப்டி ஆளாளுக்கு அந்த நாயைக்குட்டியை ஏன் தேடுகிறார்கள் என்பது படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை. இதற்காக பக் இனத்து நாய்களை விலை கொடுத்து வாங்கினோம்,. பிறகு தேவர் ஃபிலிம்ஸின் நாய் டிரையினர் லாரன்ஸ் அந்த நாய்க்குட்டிகளுக்கு ஒரு வருடம் பயிற்சி கொடுத்தார். நாய் குட்டிகளை வைத்து எடுக்கப்படும் இப்படம் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படமாக இருக்கும்’’ என்றார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் கவனிக்க, ஜெய் கே.தாஸ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;