கமல் இல்லை என்றால் இந்த மகேந்திரன் இல்லை!

கமல் இல்லை என்றால் இந்த மகேந்திரன் இல்லை!

செய்திகள் 18-Apr-2016 3:50 PM IST VRC கருத்துக்கள்

ஜி.என்.ஆர்.குமர்வேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வாகா ’படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, இயக்குன் மகேந்திரன் பெற்றுக் கொண்டார். அதற்கு முன் இயக்குனர் மகேந்திரன் பேசும்போது,

‘‘இங்கு பேசிய நிறைய பேர் இப்போதுள்ள இயக்குனர்களுக்கெல்லாம் நான் தான் இன்ஸ்பிரேஷன் என்று என்னை ரொம்பவும் மிகைப்படுத்தி பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் நான் ஒரு உண்மையை இந்த மேடையில் தெரியப்படுத்த ஆசைப்படுகிறேன். இன்று இந்த மேடையில் நான் நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த மகா கலைஞன் (கமல்ஹாசன்) தான்! நான் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்கும்போது அப்படத்திற்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அப்படத்தின் எடுத்த சில காட்சிகளை தயாரிப்பாளருக்கு போட்டு காண்பித்தபோது, ‘படத்தில் வசனங்களே இல்லையா? என்ன எடுத்து வைத்திருக்கிறீர்கள்?’ என்று என்னை ரொம்பவும் கடிந்து கொண்டார். தொடர்ந்து அப்படத்தை எடுக்க முடியுமா என்ற குழப்பம் கூட ஏற்பட்டது. அப்போது அந்த படத்தை எடுத்து முடிக்க சொந்த செலவு செய்து எனக்கு உதவி செய்தவர் அந்த மகா கலைஞன் தான்! எடுத்த படத்தை அப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிப் போய் விடலாமா என்று யோசித்து கொண்டிருந்தபோது எனக்கு தோள் கொடுத்தவர் அந்த மகா கலைஞனான கமல்ஹாசன் தான்! அன்று என்னை அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் ‘முள்ளும் மலரும்’ வந்திருக்காது, இந்த மகேந்திரனும் இருந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் மகேந்திரன்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;