‘கபாலி’க்கு குரல் கொடுக்கத் தொடங்கிய ரஜினி!

‘கபாலி’க்கு குரல் கொடுக்கத் தொடங்கிய ரஜினி!

செய்திகள் 18-Apr-2016 12:57 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த வாரத்தில் ‘தெறி’ பட வெளியீட்டில் பிஸியாக இருந்த தயாரிப்பாளர் தாணு, தற்போது மீண்டும் தான் தயாரிக்கும் இன்னொரு படமான ‘கபாலி’ வேலைகளில் களமிறங்கிவிட்டார். அட்டகத்தி, மெட்ராஸ் படங்களுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி இன்டர்நேஷனல் டானாக நடிக்கிறார். நடிகைகள் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நடிகர்கள் கலையரசன், தினேஷ், கிஷோர், ஜான் விஜய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசைப்பணிகளை கவனிக்க, எடிட்டிங் செய்கிறார் பிரவீன் கே.எல்.

சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள். ஒரு சில பேட்ஜ் ஒர்க்குகளை தவிர்த்து மற்ற படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது துரிதமாக ஆரம்பித்துள்ளது. அதோடு படத்தின் டப்பிங் வேலைகளும் ஆரம்பித்துள்ளதாக இயக்குனர் ரஞ்சித்தும், தயாரிப்பாளர் தாணுவும் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்கள். கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ‘கபாலி’ செய்திகள் தற்போது மறுபடியும் அனல்பறக்கத் தொடங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;