‘குக்கூ’ படத்திற்குப் பிறகு தற்போது ‘ஜோக்கர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் ராஜு முருகன். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஆரண்ய காண்டம், ‘ஜிகர்தண்டா’ புகழ் குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஏராளமான புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ‘முண்டாசுப்பட்டி’க்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவரின் இசையில், யுகபாரதி எழுதிய ‘என்னங்க சார் உங்க சட்டம்...’ என்ற சிங்கிள் ட்ராக் ஏற்கெனவே வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசியல்வாதிகளையும், சட்டதிட்டங்களையும் கேள்வி கேட்பதுபோல் அமைந்துள்ள இப்பாடல் தமிழக தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோல் அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்றைய நாட்டு நடப்பையும், அரசியலையும் மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வரும் 20ஆம் தேதி வெளியாகின்றது. சிங்கிள் டிராக்கைப் போல இப்படத்தின் மற்ற பாடல்களின் வரிகளும் ‘சவுக்கடி’களாக இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு?
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து சென்ற...
தமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...