‘இரு முகன்’ டீஸர் எழுப்பிய கேள்விகள்?

‘இரு முகன்’ டீஸர் எழுப்பிய கேள்விகள்?

செய்திகள் 18-Apr-2016 11:05 AM IST Chandru கருத்துக்கள்

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று மாலை ‘இரு முகன்’ படத்தின் ஒரு நிமிட டீஸர் யு ட்யூப்பில் வெளியிடப்பட்டது. ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தை ‘அரிமா நம்பி’ புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். நயன்தாரா, நித்யாமேனன் என இரண்டு நாயகிகள் நடிக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதாக ரசிகர் பாராட்டி வரும் இந்த டீஸர் சில ஆச்சரியக் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மலேசியாவின் ட்வின் டவர் ‘ஷாட்’டோடு ஆரம்பிக்கும் இந்த டீஸர், விக்ரம் ஒரு ‘ஸ்ட்ரீட் ஃபைட்டரா?’ என்ற கேள்வியை முதலில் எழுப்புகிறது. ‘கெமிக்கல்’ சம்பந்தப்பட்ட கதைக்களத்தை மையமாக உருவாகி வரும் என்று சொல்லப்படும் இப்படத்தின் டீஸரின் ஒரு ஷாட்டில், விக்ரம் மற்றும் நயன்தாராவின் கண்களில் ஏற்படும் மாற்றங்களை நொடிப்பொழுதில் காட்டி கடக்கிறார்கள். படத்தின் மையக்கருவுக்கும் இந்த கண் மாற்றத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதையே இது உணர்த்துவதாக ரசிகர்கள் ‘கமென்ட்’டுகிறார்கள்.

அதோடு, டீஸரின் இறுதியில் ‘மாஸ்க்’ அணிந்த மனிதன் ஒருவர் கெமிக்கல் லேப் ஒன்றில் எதை«யோ ஆராய்ச்சி செய்வதாக காட்டப்படுகிறது. அந்த மனிதன் விக்ரமா? படத்தில் அவர் வில்லனா? அப்படியென்றால் ‘இரு முகன்’ படத்தில் இரண்டு விக்ரம்களா? என்ற கேள்விகளையும் அது எழுப்புகின்றது.

60% சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள ‘இரு முகன்’ படம், அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்கு தற்போது தயாராகி வருகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;