சிவா, நயனுடன் மீண்டும் இணைந்த அனிருத்!

சிவா, நயனுடன் மீண்டும் இணைந்த அனிருத்!

செய்திகள் 18-Apr-2016 10:00 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினி முருகன் படத்திற்குப் பிறகு ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படம் முடிந்ததும், இதே நிறுவனத்தின் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்திலும் நடிக்கிறார் சிவா. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கெனவே, ‘எதிர்நீச்சல்’ படத்தில் இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தாலும், ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை. ‘எதிர்நீச்சல்’ படத்திற்கு இசையமைத்த அனிருத், மோகன் ராஜா இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த செய்தியை அனிருத்தே தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ ஆகிய படங்களைத் தொடர்ந்து 5வது முறையாக அவரின் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;