‘வாகா’வில் இணையும் கமல்ஹாசன், மகேந்திரன்!

‘வாகா’வில் இணையும் கமல்ஹாசன், மகேந்திரன்!

செய்திகள் 16-Apr-2016 2:59 PM IST VRC கருத்துக்கள்

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘வாகா’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை மறுநாள் (18-4-16) திங்கட் கிழமை காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது, இவ்விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் மகேந்திரன் முதற்கொண்டு ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். ‘விஜயபார்கவி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் பாலவிஸ்வநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘வாகா’வின் பெரும்பாலான காட்சிகளை காஷ்மீர் மற்றும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள ‘வாகா’ வை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;