நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல் இணையும் ‘செய்’

Sei Movie Launch & Press Meet Photos

செய்திகள் 16-Apr-2016 12:23 PM IST VRC கருத்துக்கள்

‘நாரதன்’ படத்தை தொடர்ந்து நகுல் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘செய்’. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஆஞ்சல் நகுலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ‘BEYOND EYE & TRIPPY TURTLE’ என்ற பட நிறுவனம் சார்பில் கேரளாவை சேர்ந்த் சுபீன், மனு, உமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ‘சாரதி’ என்ற மலையாள படத்தை இயக்கிய கோபால் மனோஜ் இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் தமிழ் படம் இது. இப்படத்திற்கு இசை அமைக்கும் நிக்ஸ் லோபஸும் கேரளாவை சேர்ந்தவர் தான்! ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளர் ராஜேஷ் சுக்லா இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் நடைபெற்றது.

‘செய்’ படம் குறித்து இயக்குனர் கோபால் மனோஜ் கூறும்போது, ‘‘ஒரு பெரிய நடிகர் ஆக வேண்டும் என்று நினைக்கும் ஒரு பையனுக்கும், ஒரு பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும் கதை தான் ‘செய்’. இந்த கதைக்கு துறுதுறுவென்று இருக்கிற ஒரு நடிகர் தேவைப்பட்டார். அதற்கு நகுல் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை கதாநாயகனாக தேர்வு செய்தோம். அதைப்போல கதாநாயகி கேரக்டருக்கு ஃப்ரெஷ் ஆன ஒரு நடிகை தேவைப்பட்டது. அப்படி தேடியபோது பாலிவுட்டில் இருந்து கிடைத்தவர் தான் ஆஞ்சல்! இப்படத்தின் பின்னணியில் பணியாற்றுகிற பெரும்பாலானோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் தான்! தமிழ் திரைப்படங்கள் மீதான ஈர்ப்பால் தமிழில் படம் வந்திருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் ட்ரைலர்


;