சசிகுமாரின் திடீர் ரிலீஸ் பிளான்!

சசிகுமாரின் திடீர் ரிலீஸ் பிளான்!

செய்திகள் 16-Apr-2016 11:38 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி உலகமெங்கும் விஜய்யின் ‘தெறி’ படம் வெளியானது. வழக்கமாக பெரிய படங்கள் வெளியானால், அதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேறெந்த முக்கியமான படங்களும் வெளியாகாது. இந்நிலையில், சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ படம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) வெளியாகவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஏப்ரல் 29ஆம் தேதியில் ‘வெற்றிவேல்’ படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், திடீர் திருப்பமாக படத்தை ஒரு வாரம் முன்பாக, அதாவது இந்த வெள்ளிக்கிழமையே வெளியிடவிருப்பது திரையுலகினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளரான டி.இமான் ட்விட்டரில், ‘‘மிகவும் அரிதான ஒரு விஷயத்தை சினிமாவில் செய்துள்ளது வெற்றிவேல். ரிலீஸ் முந்தியுள்ளது... ஏப்ரல் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;