ஃபேஸ்புக், ட்விட்டர் தந்த மாற்றத்தை சொல்லும் படம்!

ஃபேஸ்புக், ட்விட்டர் தந்த மாற்றத்தை சொல்லும் படம்!

செய்திகள் 16-Apr-2016 9:53 AM IST VRC கருத்துக்கள்

‘டூரிங் டாக்கீஸ்’, ‘மாதவனும் மலர் கொடியும்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அஸ்வின் குமார் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இணைய தலைமுறை’. இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடிக்கிறார். இவர் ‘கம்பீரம்’ படத்தில் சரத்குமார் மகளாகவும், ‘நண்பர்கள் கவனத்திற்கு’, ‘விந்தை’ ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்தவராவார்.

ஒரு சில முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றிய சு.சி.ஈஸ்வர் இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குனர் ஈஸ்வர் கூறும்போது, ‘ ‘‘கல்லூரி வாழ்க்கை என்பது சுவாரஸ்யமானது.அது மட்டுமல்லாமல் உல்லாச பறவைகளாக பாடி திரிந்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட அவர்களது வாழ்க்கையில் இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை எப்படிப்பட்ட மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காதல், மோதல், சென்டிமென்ட், காமெடி கலந்து திரைக்கதை உருவாக்கி இருக்கிறோம்’’ என்றார்.

‘மாறன் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் கதை எழுதி தயாரிக்கும் இப்படத்திற்கு டி.ஜெ.கோபிநாத் இசை அமைக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;