என்னை நடிகனாக்கிய கார்த்திக் சுப்புராஜ்! – எஸ்.ஜே.சூர்யா

என்னை நடிகனாக்கிய கார்த்திக் சுப்புராஜ்! – எஸ்.ஜே.சூர்யா

செய்திகள் 15-Apr-2016 5:10 PM IST VRC கருத்துக்கள்

‘‘நான் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக, இசை அமைப்பாளராக இருந்திருக்கிறேன் என்றாலும் இதுவரை நான் ஒரு நல்ல நடிகனா வெளிப்பட்டதிலை என்று நினைப்பேன். எனக்கு எப்போது நல்ல நடிகன் என்ற அங்கீகாரம் கிடைக்கும் விதமாக ஒரு படம் அமையும் என்று நினைத்தது உண்டு! என்றைக்கு நிறைய ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு இயக்குனர் என்னை நடிக்க வைக்கிறாரோ அன்றைக்கு தான் நான் ஒரு நடிகனா வெளிப்படுவேன் என்றும் நினைத்ததும் உண்டு, ஆசைப்பட்டதும் உண்டு! அந்த ஆசையை இந்த ‘இறைவி’ மூலம் நிறைவேற்றி வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் சார்! இதுவரை நான் வேறு இயக்குனர்கள் படங்களில் நடித்திருந்தாலும் இந்த கேரக்டரை நான் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று என்னை நம்பி ‘இறைவி’யில் நடிக்க வைத்ததற்கு கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி’’ என்றார் எஸ்.ஜே.சூர்யா, இன்று சென்னையில் நடந்த ‘இறைவி’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;