‘இறைவி’ பற்றி விஜய்சேதுபதி!

‘இறைவி’ பற்றி விஜய்சேதுபதி!

செய்திகள் 15-Apr-2016 4:46 PM IST VRC கருத்துக்கள்

‘‘இந்த கதை (இறைவி) எழுதியதால் கார்த்திக் சுப்புராஜ் மீது எனக்கு பெரிய மரியாதை வந்து விட்டது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களை எடுத்து முடித்த பிறகு அதைப்போல வேறு ஒரு ஜானர் படம் தர முடியும் என்றால் அதை கார்த்திக் சுப்புராஜால் மட்டும் தான் முடியும் என்று நினைத்தேன். அது மாதிரியே ஒரு கதையை எழுதியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்! இது அவரால் மட்டும் தான் முடியும். இந்த படத்தை பற்றி சொல்வதென்றால் நம் எல்லோருக்கும் தெரிந்த, நம்மை சுற்றி இருக்கிற மனைவி, காதலி, சகோதரி, இல்லை அம்மா பற்றிய கதை இது. அதாவது நாம் கவனிக்காமல் விட்ட அவர்களின் ஒரு பக்கத்தை பற்றிய படம் இது. கண்டிபாக இந்த படத்தை பார்த்து முடித்த பிறகு நாம் ஒரு நிமிடம் யோசிப்போம். நாம் அவர்களுக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்யாமல் விட்டு விட்டோமா, இல்லை அவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டோமா என்று! அப்படியொரு இதுவரை யாரும் கையில் எடுக்காத ஒரு கதையை கையில் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும் நான் நடித்த இந்த படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவலை தூண்டியுள்ளது’’ என்கிறார் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘இறைவி’ குறித்து விஜய்சேதுபதி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;