ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் ‘விதி மதி உல்டா’

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் ‘விதி மதி உல்டா’

செய்திகள் 15-Apr-2016 11:30 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘டார்லிங்-2’ படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்தவர் ரமீஸ் ராஜா. இவர் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘விதி மதி உலடா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ரமீஸ் ராஜாவே தனது ‘ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்’ பேனரில் தயாரித்து நடிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்குகிறார். இப்படம் குறித்து ரமீஸ் ராஜா கூறும்போது,

‘‘மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்டது. விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு மட்டுமே உண்டு! அதுவே உல்டாவாகி விட்டால் என்ன விபரீதம் நடக்கும்? இது தான் ‘விதி மதி உல்டா’வின் கதை கரு. இதை காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரைக்கதையாக்கி இயக்குகிறார் விஜய் பாலாஜி’’ என்றார்.

இந்த படத்தில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்க, இவர்களுடன் வித்தியாசமான கேரக்டரில் டேனியல் பாலாஜி மற்றும் கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களில் படமாகும் ‘விதி மதி உல்டா’வின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை மார்ட்டின் ஜோ கவனிக்க, அஸ்வின் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தா தா 87 டீஸர்


;