10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறான் ‘திருட்டுப்பயலே’!

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறான் ‘திருட்டுப்பயலே’!

செய்திகள் 15-Apr-2016 11:11 AM IST Chandru கருத்துக்கள்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கி, ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, விவேக் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து, 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘திருட்டுப்பயலே’. ஜீவன் நெகடிவ் ரோலில் நடித்திருந்த இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, நல்ல வசூலும் செய்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். இதுகுறித்த அறிவிப்பு ‘திருட்டுப்பயலே-2’ போஸ்டராக இன்றைய நாளிதழ்களில் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் சுசிகணேசனே இந்த 2ஆம் பாகத்தையும் இயக்குகிறார் என்பதைத் தவிர்த்து வேறெந்த விவரங்களும் அந்த போஸ்டரில் இடம்பெறவில்லை.

போஸ்டரைப் பார்க்கும்போது, தகவல் தொழில்நுட்பத்தின் உதவி மூலம் சதிவேலைகளில் ஈடுபடுபவராக படத்தின் ஹீரோ நடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;