நிஜ சம்பவ பின்னணியில் உருவாகும் ‘நான் அவளை சந்தித்தபோது’

நிஜ சம்பவ பின்னணியில் உருவாகும் ‘நான் அவளை சந்தித்தபோது’

செய்திகள் 15-Apr-2016 11:05 AM IST VRC கருத்துக்கள்

‘மாசாணி’ ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை’ ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கும் படம் ‘நான் அவளை சந்தித்தப்போது’. இப்படத்தில் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல மலையாள நடிகரும், பாராளுமன்ற உறுப்பினருமான இன்னசன்ட் மற்றும் ஜிம்.எம்.குமார், ராதா, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன் முதலானோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை நேற்று காலை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது.

இப்படம் குறித்து இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர் கூறும்போது, ‘‘1996-ஆம் ஆண்டு நடந்த நிஜ சம்பவத்தை மையப்படுத்தி இதன் கதையை உருவாக்கி உள்ளோம். சினிமா பின்னணியை கொண்ட இந்த திரைக்கதையில் அம்மா சென்டிமென்ட், காதல் ஆகியவையும் உண்டு. இப்படத்தின் படப்பிடிபு தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது’’ என்றார்.

‘சினிமா பிளாட்பாரம்’ என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்தீஷ்குமார் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஆர்.எஸ்.செல்வா கவனிக்க, ஹித்தேஷ் முருகவேல் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராஜா ரங்குஸ்கி - மோஷன் போஸ்டர்


;