முகூர்த்த தேதி குறித்த சிம்ஹா – ரேஷ்மி!

முகூர்த்த தேதி குறித்த சிம்ஹா – ரேஷ்மி!

செய்திகள் 15-Apr-2016 10:49 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யவும் முடிவு செய்தனர். இருவர் வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமணம் இம்மாதம் 22-ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் நடைபெறவிருக்கிறது. அங்கு நடைபெறும் திருமணத்தை தொடர்ந்து வருகிற 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை, வடபழனியிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லற வாழக்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் பாபி சிம்ஹா, ரேஷ்மி தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வின் அட்வான்ஸ் திருமண நல் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;