‘தெறி’யை வெளியிடாத தியேட்டர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி வைத்தியம்!

‘தெறி’யை வெளியிடாத தியேட்டர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி வைத்தியம்!

செய்திகள் 14-Apr-2016 5:26 PM IST Chandru கருத்துக்கள்

பொதுவாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றால் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளிலும் நள்ளிரவு 12.00 மணி முதல் சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் விஜய் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. சிறப்புக் காட்சிகளின் மூலம் கணிசமான தொகையை தியேட்டர்கள் வசூலித்துவிடும். ஆனால், ‘தெறி’ படத்திற்கு நடந்ததே வேறு. என்ன நடந்ததோ தெரியவில்லை கடைசி நேரத்தில் செங்கல்பட்டு ஏரியாவைச் சேர்ந்த எந்த திரையரங்கிலும் ‘தெறி’ படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான ரசிகர்களுக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, இன்று மதியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தாணு விளக்கமளித்தார். அப்போது, ‘தெறி’ படத்தை செங்கல்பட்டு தியேட்டர்கள் வெளியிடாத சம்பவத்திற்கு பின்புலத்தில் பிரபலம் ஒருவர் இருப்பதாகவும், அவர் யார் என்பதை தற்போது வெளியிட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, ‘தெறி’ படம் வெளியாகி பாசிட்டிவ் ரிப்போர்ட் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து, செங்கல்பட்டு ஏரியாவிலுள்ள சில திரையரங்கங்கள் தெறி படத்தை வெளியிடுவதற்கு முன்வந்துள்ளதாகவும், அந்த தியைரங்கங்களைத் தவிர்த்து, ‘தெறி’ படத்தை கடைசிவரை வெளியிடாத தியேட்டர்களுக்கு இனி முன்னணி நடிகர்களின் படங்களை தரப்போவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் தாணு தெரிவித்தார். மற்ற சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தாணு தயாரிப்பில், ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கபாலி’ படம் மேற்படி தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;