‘தெறி’ படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்த பிரபல சேனல்காரர்கள்!

‘தெறி’ படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்த பிரபல சேனல்காரர்கள்!

செய்திகள் 14-Apr-2016 5:26 PM IST Chandru கருத்துக்கள்

தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தெறி’ படம் இன்று உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளது. செங்கல்பட்டு ஏரியா திரையரங்கங்களில் மட்டும் சிற்சில பிரச்சனைகள் காரணமாக ‘தெறி’ படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்நிலையில், பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ‘தெறி’ படத்தின் முதல் 30 நிமிடக் காட்சிகள் திருட்டுத்தனமாக பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை ஃபிலிம் சேம்பரில் தயாரிப்பாளர் தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அந்த சந்திப்பின்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,

‘‘தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வெளிவந்துள்ள ‘தெறி’ படத்தை கோவையில் உள்ள சாந்தி திரையரங்கில் பாலிமர் தொலைக்காட்சி நிறுவனத்தினைச் சார்ந்தவர்கள் கேமரா வைத்து படத்தினை பதிவு செய்ததை, ரசிகர் மன்றத்தினைச் சார்ந்தவர்கள் பார்த்து அவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் இதுவரை நடந்திராத வகையில், தொலைக்காட்சி நிறுவனத்தினைச் சார்ந்தவர்களே படத்தை திருட்டு விசிடி தயாரிக்க முனைந்துள்ளது திரையுலகைச் சார்ந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொழில் துரோகம் செய்த அந்த பாலிமர் தொலைக்காட்சியை திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவை இணைந்து தீர்மானம் திறைவேற்றியுள்ளது.’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;