மீண்டும் ஹாரர் படத்தில் ‘களம்’ இறங்கிய அம்ஜத்!

மீண்டும் ஹாரர் படத்தில் ‘களம்’ இறங்கிய அம்ஜத்!

செய்திகள் 13-Apr-2016 5:25 PM IST VRC கருத்துக்கள்

‘மாயா’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்த அம்ஜத் நடித்திருக்கும் மற்றொரு ஹாரர் த்ரில்லர் படம் ‘களம்’. ஜீவா ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராபர்ட் எஸ்.ராஜ் இயக்கியிருக்கும் ‘களம்’ குறித்து அம்ஜத்திடம் கேட்டபோது,

‘‘மாயா’வில் நடித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு கிடைத்த மற்றொரு ஹாரர் பட வாய்ப்பு தான் இந்த ‘களம்’. இப்படத்தை இயக்கியிருக்கும் ராபர்ட் எஸ்.ராஜ் எனது நெருங்கிய நண்பர் என்பதால கதையை கேட்காமலேயே இப்படத்தில் நடித்துள்ளேன்! ‘மாயா’ எப்படி ஒரு வித்தியாசமான படமாகவும், டெக்னிகலாகவும் பேசப்பட்டதோ அதைப் போல இந்த ‘களம்’ படமும் பேசப்படும் விதமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள முகேஷ், ‘Arri Alexa cooke S 4i’ என்ற அதி நவீன கேமராவை எல்லாம பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியுள்ளார். முகேஷ் இப்போது அரவிந்த் சாமி நடிக்கும் ஒரு ஹிந்தி படம் தெலுங்கில் பூரிஜெகந்நாத் இயக்கும் படம் என பணியாற்றி வருகிறார்.

‘ரௌத்திரம்’ படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த பிரகாஷ் நிக்கி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்! அவரது பின்னணி இசை பேசப்படும் விதமாக அமைந்துள்ளது! இப்படத்தில் எனக்கு ஜோடியாக ‘மாயா’ படத்தில் நயன்தாரவோட ஃப்ரெண்டாக நடித்த லட்சுமி ப்ரியா நடித்துள்ளார். வெளிநாட்டில் படித்து அங்கேயே திருமணம் செய்து கொண்டு, ஒரு பிரச்சனை காரணமாக இந்தியாவில் வந்து செட்டில் ஆக நினைக்கும் ஒருவரின் கேரக்டரில் நான் நடித்துள்ளேஏன். இந்தியாவுக்கு வந்து பூர்வீக வீட்டில் குடியேறும்போது ஒரு பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. சொந்த பந்தங்களை எல்லாம் இழந்து விடுமோ என்பது மாதிரியான அந்த பிரச்சனையை நான் எப்படி சமாளிக்கிறேன் என்பது தான் படத்தின் மைய கதை! படத்தோட எண்பது சதவிகித படப்பிடிப்பையும் ஒரு வீட்டுக்குள்ளேயே நடத்தப்பட்டுள்ளது. குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட பட இது! இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை தயாரிப்பாளர் சுபீஷ் சந்திரனே எழுதியுள்ளார். அனைத்து வேலைகளும் முடிந்த ‘களம்’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிஃபிக்கெட்டும் கிடைத்து விட்டது. ‘களம்’ இம்மாதம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் களமிறங்கவிருக்கிறது’’ என்றார் அம்ஜத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;